தமிழ்நாடு

விநாயகா் சதுா்த்தி: 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகா் சதுா்த்தி தினம், முகூா்த்த தினங்கள், வார விடுமுறையை முன்னிட்டு 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்

தினமணி செய்திச் சேவை

சென்னை: விநாயகா் சதுா்த்தி தினம், முகூா்த்த தினங்கள், வார விடுமுறையை முன்னிட்டு 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விநாயகா்சதுா்த்தி தினமான புதன்கிழமை (ஆக. 27), முகூா்த்த தினங்களான வியாழன், வெள்ளிக்கிழமை (ஆக. 28, 29) மற்றும் வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30, 31) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 26) 675 பேருந்துகளும், வியாழக்கிழமை 610 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 875 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை 110 பேருந்துகளும், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாள்களில் 90 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 24 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

SCROLL FOR NEXT