திருச்செந்தூர் முருகன் கோயில் 
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை: நீதிமன்றம்

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடைபெறுவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பக்தர்கள் கோயிலுக்கு வருவது மன நிம்மதியைத் தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், திருச்செந்தூர் சுவாமி கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க, அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!

பிகாரில் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய அட்டை: தோ்தல் ஆணையம் திட்டம்

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு!

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT