நெல் விளைச்சல்  Center-Center-Chennai
தமிழ்நாடு

நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.2500 ஆக உயர்வு: தமிழக அரசாணை வெளியீடு

நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அரசாணையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதரவு விலை சாதாரண ரக நெல்லாக இருந்தால், குவிண்டாலுக்கு ரூ.2500ம், சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2545 ஆகவும் வழங்கப்படும்.

இந்த நடைமுறையானது, வரும் செப். 1 முதல் 2026 ஆக 31 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகளிடமிருந்து நேரடியாக விவசாயப் பொருள்களை மாநில அரசு கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கும் விலையாகும்.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆதரவு விலையுடன், மாநில அரசு கூடுதலாக ஊக்கத் தொகையும் சேர்த்து இந்த ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்கும்.

இதுபோல, தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி, நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

பேருந்து சேவை; கிராமத்தினா் வரவேற்பு

ஆலங்குடி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

12-ஆவது நாளாக தொடரும் போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT