கோப்புப்படம் IANS
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை தொடரும்.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(டிச. 3) காலை 5.30 மணியளவில் மேலும் வலுவிழந்தது.

வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி) வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain in 17 districts including Chennai for the next 3 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”தமிழ்நாட்டில் பிகார் மக்களுக்கு ஓட்டா?” உண்ணாவிரதப் போராட்டத்தில் மன்சூர் அலிகான்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் விநாயகன்!

வெளிப்படைத் தன்மைக்காகத் தேர்வா? துணிந்து பொய் சொல்கிறார் ஞானேஷ் குமார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குளிர் ஜாலம்... மாதுரி ஜெயின்!

ஓடிடியில் காந்தா எப்போது?

SCROLL FOR NEXT