கனமழை எச்சரிக்கை 
தமிழ்நாடு

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

டிட்வா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து இன்றும் கனமழை எச்சரிக்கை..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். டிட்வா புயலின் தாக்கத்தால்இலங்கையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து, சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்த நிலையில், இன்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (டிச.05) நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“சினிமாவை உயிராக நேசித்தவர் AVM சரவணன்” நடிகர் ரஜினிகாந்த்

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் புதிய தொடர் அறிவிப்பு! மகாநதி சீரியல் நிறைவடைகிறதா?

சென்னையில் மீண்டும் மழை! அவ்வப்போது திடீர் மழை பெய்யலாம்!

சிக்கலில் இண்டிகோ! காத்திருக்கும் பயணிகளால் திணறும் விமான நிலையங்கள்!

அனுபமாவின் லாக் டவுன் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT