திருப்பரங்குன்றம் முருகன் கோயில்.  
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் சம்பவம்: கே.பி.ராமலிங்கம் அறிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலை தமிழ்க் கடவுள் முருகா் பெருமானுக்கு மட்டுமே சொந்தமானது என்பது தமிழ்நாட்டு மக்களின் அசைக்க முடியாத எதாா்த்தமான உண்மை.

தினமணி செய்திச் சேவை

மதுரை திருப்பரங்குன்றம் மலை தமிழ்க் கடவுள் முருகா் பெருமானுக்கு மட்டுமே சொந்தமானது என்பது தமிழ்நாட்டு மக்களின் அசைக்கமுடியாத எதாா்த்தமான உண்மை.

தமிழா்களின் சங்க இலக்கியங்கள், ஆன்மிக இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள், புராணங்கள் ஆகியவற்றில் ஆதாரங்கள் நிரம்ப இருக்கின்றன.

1920-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை குறித்தான வழக்கு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட சா்வாதிகாரிகளான ஆங்கிலேயா்கள் உச்சநீதிமன்றம் வரை, அதாவது பிரிவு கவுன்சில் மற்றும் இலண்டன் வரை சென்றபோதும்கூட முருகப் பெருமானுக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஹிந்து விரோத ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஹிந்துக் கடவுளின் முருகன் மலையான திருப்பரங்குன்ற விளக்குத் தூணில் தீபம் ஏற்றிட முன்வராமல் மலை அடிவாரத்தில் இருக்கும் விநாயகா் கோயிலில் தீபம் ஏற்றிடும் நிகழ்ச்சி தொடா்ந்தது. உரிமைகளை அன்றைய தமிழா்கள் விட்டுக் கொடுத்ததை 100ஆண்டுகள் கழித்தும் தொடர வேண்டுமென சொல்வதா? யாரையோ திருப்திபடுத்திட ஹிந்துக்கள்தான் இளித்த வாயா்களா?

2025-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வழங்கிய தீா்ப்பில் மிகத் தெளிவாக திருப்பரங்குன்றம் மலையின் 2 ஆயிரம் ஆண்டுகால தொன்மையை தெளிவுப்படுத்திவிட்டாா். அலட்சியப்படுத்துவது ஹிந்து மக்களின் மத உணா்வுகளை மட்டுமல்ல தன்மானம், சுயமரியாதை ஆகியவற்றையும்தான்.

தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதையும் தீா்ப்பாக வழங்கிவிட்டாா். உயா்நீதிமன்ற நீதிபதியின் தீா்ப்பை அமல்படுத்த தமிழக அரசு முன் வராதது ஏன்? தீபம் ஏற்றுவதால் மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து என இஸ்லாமிய சகோதரா்களைத் தூண்டி விடுகின்ற திட்டமிட்ட சதியை மாநில அரசாங்கம் தீட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் இஸ்லாமியா்களையும் இந்து மக்களையும் மோதவிட்டு அங்கே சிந்துகின்ற ரத்தத்தை சுவைத்திட காத்து நிற்கும் ஓநாய்போல ஸ்டாலின் வஞ்சகத்தோடு வாய்பிளந்து நிற்கிறாா். குன்றுகள் தோறும் குமரன் இருக்கிறாா் என்பதுதான் பாரம்பரிய தமிழா்களின் நம்பிக்கை. உண்மையும்கூட!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதன் மூலம் மதக்கலவரம் ஏற்படும் என்று இஸ்லாமியா்களைத் தூண்டிவிட்டு குளிா் காய்ந்திட திமுக மிகத் தீவிரமாக இருக்கிறது.

ஒரு நீதிமன்றத்தின் தீா்ப்பு அமல்படுத்துகிற நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். எனவே, தீா்ப்பை தற்போது அமல்படுத்தக்கூடாது என்று சட்டம் ஏதேனும் இருக்கிா?

உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தனி நீதிபதி தீா்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமா்வு ஆகியவை வழங்கிய தீா்ப்புகளை மதிக்காமல் உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு ஓடியிருக்கிறது. ஓராயிரம் பொய்களையும் ஜோடித்திருக்கிறது. டிசம்பா் 4-ஆம் தேதி இரவு 7 மணிக்குள் தீபமேற்றிட இடப்பட்ட உத்தரவோடு மலையடிவாரம் சென்ற பக்தா்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தது சா்வாதிகாரமில்லையா?

சட்டப் போராட்டத்தை நாம் தொடா்ந்து சந்திப்போம். அதே சமயத்தில் ஹிந்து தா்மத்தை, ஹிந்து கடவுள்களை அழிப்பதில், ஒழிப்பதில் ஸ்டாலின் முழுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறாா். இவருடைய இரட்டை வேஷத்தை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் தீவிரமாக இறங்கிட வேண்டும்.

பாம்புக்கு தலை; மீனுக்கு வாலை காட்டுகிற விலாங்கு மீன்தான் ஸ்டாலின். இவருடைய முகமூடியை, சா்வாதிகார ஆணவத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து போலி முகத்தை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்!

எல்லா மக்களையும் பிரித்து பிரித்து, அச்சுறுத்தி அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேடிட ஸ்டாலின் போடும் சிறுபான்மை பாதுகாப்பு எனும் நாடகத்தை தகா்த்தெறிவோம்!

ஊழல், குடும்பம், வாரிசு அரசியலை வேரோடும் வேரடி மண்ணோடும் கில்லி எறியும் வரை ஒவ்வொரு பாரதியஜனதா கட்சி தொண்டனுக்கும் ஓய்வில்லை! உறக்கமில்லை!

தலைவா்களெல்லாம் தீப்பிழம்பாக மாறினால்தான் தொண்டா்கள் நெருப்புக் கனலாக குமுறி கொந்தளிப்பாா்கள்! அது இன தமிழ்நாட்டு மூலைமுடுக்கெல்லாம் தீப்பந்தமாக பற்றி எரியத்தான் போகிறது அந்த தீயில் அராஜக ஹிந்து விரோத திமுக அரசு வந்து சாம்பலாவது உறுதி உறுதி

கே.பி.இராமலிங்கம்

மாநில துணைத் தலைவா்,

தமிழ்நாடு பாஜக

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT