தமிழ்நாடு

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாகா்கோவிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

விடுமுறைக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், நாகா்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழை (டிச. 7) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06012) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06011) தாம்பரத்திலிருந்து டிச.8-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகா்கோயில் சென்றடையும்.

இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், கோவையிலிருந்து டிச.7-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06023) சென்ட்ரலிலிருந்து டிச.8-இல் பிற்பகல் 12.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி! சம்பவ இடத்தின் காட்சிகள்!

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

அஜீத் பவாரின் நிறைவேறாத முதல்வர் கனவு! மகுடம் சூடாத மக்களின் மன்னர்!

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

SCROLL FOR NEXT