தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தினமணி செய்திச் சேவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் கடந்த மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தி அவர்களும் 2017-ஆம் ஆண்டே உடல்நலக் குறைவால் காலமானார். இத்தம்பதியருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைள் உள்ளனர்.

பெற்றோரை இழந்து தவிக்கும் நான்கு குழந்தைகளை முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார். இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் என்று முதல்வர் தனது சமூகவலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றையதினம் முதல்வர், மறைந்த கமலக்கண்ணன் அவர்களின் மகள் – செல்வி லாவண்யாவிற்கு ரூ.2,50,000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,55,600/- மதிப்பீட்டில் வீடு கட்டுதவற்கு ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும், மகள் செல்வி ரிஷிகா மற்றும் மகன் செல்வன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா ரூ.2000/- நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மகள் செல்வி ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6,000/- உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

CM Stalin provided various welfare assistance to four orphaned children from Kallakurichi district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் திருப்பம்: மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்றது அம்பலம்: மேலும் 4 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே சடலத்துடன் சாலையில் மறியல்

தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஒரு மாதத்தைக் கடந்த ஈரான் மக்கள் போராட்டம் : மத்திய கிழக்கில் அமெரிக்க போா்க்கப்பல்கள்

நெல்லையில் 2,480 மாணவா்களுக்கு மடிக்கணினி

SCROLL FOR NEXT