தமிழ்நாடு

"தினமணி' சார்பில் மதுரையில் நாளை மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, "தினமணி' நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வியாழக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, "தினமணி' நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வியாழக்கிழமை (டிச. 11) நடைபெறுகிறது.

மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, எழுத்தாளர் பிரேமா நந்தகுமாருக்கு "மகாகவி பாரதியார்' விருதை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார். இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையும் விருதாளருக்கு வழங்கப்படுகிறது.

இதையடுத்து, விருதாளர் பிரேமா நந்தகுமார் ஏற்புரையாற்றுகிறார்.

விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகிக்கிறார். தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி நன்றி கூறுகிறார்.

எட்டயபுரத்தில்... முன்னதாக வியாழக்கிழமை காலை, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழார்வலர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT