மத்திய நிதியமைச்சருடன் அருண் நேரு சந்திப்பு Photo: X / Arun Nehru
தமிழ்நாடு

மத்திய நிதியமைச்சருடன் அருண் நேரு சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் - அருண் நேரு சந்திப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி அருண் நேரு செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நிர்மலா சீதாரமனை சந்தித்து, கோரிக்கை மனுவை அருண் நேரு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“இன்று, புது தில்லியில், பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் இரண்டு முக்கியமான விவகாரங்களை நிதியமைச்சரை நேரில் சந்தித்து முன்வைத்தேன்:

1. கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான அவசர திருத்தங்கள் - இந்தியா முழுவதும் உள்ள கடன் வாங்கும் பொதுமக்களுக்கு நியாயம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

2. பிஏசிஎல் லிமிட். மோசடியில் தாங்கள் வியர்வை சிந்தி சேமித்த சேமிப்பை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், குறிப்பாக துறையூர் பெண்களுக்கும், விரைவான பணத்தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி, இதுதொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 252 பக்க அறிக்கையையும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

DMK MP Arun Nehru meets Union Finance Minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரை மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு!

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

SCROLL FOR NEXT