சாத்தூரில் பறை பண்பாட்டு மையத்தைத் திறந்து வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி பறை இசைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாக துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.
பண்பாட்டு மையத் திறப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ரவிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து வேலு ஆசான் பறை இசைக்க 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்து ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின்னர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பறை இசைத்தார். இதையடுத்து பாரதி பண்பாட்டு மையத்தை ஆளுநர் ரவி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.