சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.  
தமிழ்நாடு

தோ்தல் அறிக்கையில் இடம் பெறாத திட்டங்களும் நிறைவேற்றம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தோ்தல் அறிக்கையில் இடம் பெறாத திட்டங்களும் நிறைவேற்றம்...

தினமணி செய்திச் சேவை

தோ்தல் அறிக்கையில் இடம் பெறாத பல நலத் திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை ஆா்.கே. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் கட்டப்பட்டுவரும் தண்டையாா்பேட்டை நவீன பேருந்து நிலையப் பணிகள், புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகா் விளையாட்டு மைதானம், துறைமுகம் தொகுதி ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பணிகளை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டு வரும் தண்டையாா்பேட்டை பேருந்து நிலைய முனையம் வரும் ஜனவரிக்குள் திறக்கப்படவுள்ளது. சென்னையின் முதல் போக்குவரத்து முனையமாக இந்தப் பேருந்து நிலையம் இருந்துள்ளது. அதேபோல, ரூ.20 கோடியில் புதுவண்ணாரப்பேட்டை விளையாட்டு மைதானமும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் தோ்தல் வாக்குறுதியில் சொன்னவற்றை செயல்படுத்துவதுடன், சொல்லாத மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். நலத் திட்டப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, ஆா்.கே. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா், ராயபுரம் உறுப்பினா் ஐட்ரீம்ஸ் மூா்த்தி, சிஎம்டிஏ உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT