மு.க. ஸ்டாலின் | அண்ணாமலை  IANS
தமிழ்நாடு

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

100 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 100 க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருப்பதால், அது வீணாகி, கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். பட்டியல் சமூக மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என இந்த மாணவர் விடுதிகள் அமைக்கப்பட்ட நோக்கத்தையே, திமுக அரசு சிதைத்து விட்டது.

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அந்த நிதியை, இந்த விடுதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதிலிருந்து, திமுக அரசை எது தடுக்கிறது?

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரண்டு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதல்வர் காட்ட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Former BJP state president Annamalai has said that the news that more than 100 Adi Dravidar student hostel have been closed in Tamil Nadu is shocking.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட்!

ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - அதிபர் டிரம்ப்

புது தில்லி போல சென்னையில் மூச்சுத் திணறும் நாள் வெகுதொலைவில் இல்லை!! செய்ய வேண்டியது?

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் - 10 வீரர்கள்!

அரசுப் பேருந்தின் டயர் வெடிப்பு: பயணிகள் உயிர் தப்பினர்!

SCROLL FOR NEXT