தங்கம் விலை file photo
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,320 குறைந்துள்ளது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 16) சவரனுக்கு ரூ. 1,320 குறைந்துள்ளது.

தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.96,000-க்கு மிகாமல் விற்பனையானது.

கடந்த டிச.12-இல் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960-க்கு விற்பனையானது.

இதனிடையே, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 15) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680-க்கு விற்பனையானது.

பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இதன்மூலம் நிகழாண்டில் கடந்த 12 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,920 உயா்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 16) சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து ஒரு சவரன் ரூ. 98,800-க்கும் கிராமுக்கு ரூ. 165 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைவு: தொழிற்சாலைகள் பயன்பாடு மற்றும் மின்சாதனப் பொருள்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

வெள்ளி விலை திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயர்ந்து ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 211-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.2.11 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold has decreased by Rs. 1,320 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT