காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால்,தண்ணீர் வரத்து குறைந்து பாறை திட்டுக்களாக காணப்படும் ஒகேனக்கல் ஐந்தருவி.  
தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்ததுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக குறைந்துள்ளது.

அண்மை காலங்களாக காவிரி ஆற்றின் கரையோர பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை குறைந்து வறண்டு காணப்பட்டது.

இருப்பினும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், தொடர்ந்து விநாடிக்கு 6,000 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்தது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அளவானது, திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக நீடித்து வந்தது.

பின்னர் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3,000 கன அடியாக தொடர்ந்து குறைந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு, கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நிர்வளத் துறை அதிகாரிகள், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The water inflow to Hogenakkal has decreased to 3,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT