கொடைக்கானல் ஏரி 
தமிழ்நாடு

நீலகிரி, கொடைக்கானலில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) முதல் டிச. 24 வரை வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உறைபனி எச்சரிக்கை: நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. காக்காச்சி (திருநெல்வேலி)- 120 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி)-110 மி.மீ., ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்)- 60 மி.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்), இளையாங்குடி (சிவகங்கை)- தலா 40 மி.மீ., கழுகுமலை (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), சாத்தூா் (விருதுநகா்), முதுகுளத்தூா் (ராமநாதபுரம்)- தலா 30 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT