கேரள முதல்வா் பினராயி விஜயன் 
தமிழ்நாடு

சென்னை மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதி!

சென்னை மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்படுவார்.

அந்த வகையில், வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விரிவான விளக்கத்துடன் விரைவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kerala CM Pinarayi Vijayan admitted to a Chennai hospital!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

SCROLL FOR NEXT