அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  Photo: X / Nainar Nagendran
தமிழ்நாடு

திமுக ஆட்சியால் மக்கள் கொந்தளிப்பு! இபிஎஸ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் இபிஎஸ்...

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆட்சியால் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சென்னைக்கு இன்று வருகைதந்த பியூஸ் கோயல், தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பியூஸ் கோயலுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

”தமிழகத்தில் இருக்கும் நிலவரம் குறித்து பியூஸ் கோயல் கேட்டறிந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எப்படி தேர்தலை சந்திப்பது என்ற கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழக முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

AIADMK General Secretary Edappadi Palaniswami stated on Tuesday that the people of Tamil Nadu are outraged by the DMK government's rule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாண்டில் அறிமுகமாகும் டாடாவின் புதிய மின்சார கார்கள்!

பாஜக உடன் கூட்டணியா? ஓபிஎஸ் ஆலோசனை

முடிவுக்கு வந்த ஸ்ரீ சிமென்ட் ஆலை ஊழியர்களின் போராட்டம்!

நெய்மருக்கு அறுவைச் சிகிச்சை... கால்பந்து உலகக் கோப்பை 2026-இல் பங்கேற்பாரா?

தவெகவில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் : விஜய்

SCROLL FOR NEXT