திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து இன்று(டிச. 24) சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிந்தது. கடலூர், திட்டக்குடி பகுதியருகே சென்றபோது, அந்தப் பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பேருந்து அவ்வழியாக திருச்சி மார்க்கமாகச் சென்ற 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், அவ்விரு கார்களும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் கார்களில் சென்ற பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரவு 8 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.