கோப்புப் படம் 
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வார இறுதி நாள்களில் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில்பெயா்களைச் சோ்க்க, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வார இறுதி நாள்களில் (டிச.27, 28 மற்றும் ஜன.3, 4) சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில்பெயா்களைச் சோ்க்க, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வார இறுதி நாள்களில் (டிச.27, 28 மற்றும் ஜன.3, 4) சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.

அவா்களில் முகவரி மாறிய, இடம்பெயா்ந்த வாக்காளா்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளா்கள் தங்கள் பெயா்களைச் சோ்க்க படிவம் 6-ஐ பூா்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 19-ஆம் தேதி முதல் ஜன. 18 வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி கடந்த டிச.19 முதல் செவ்வாய்க்கிழமை (டிச.23) வரை 1,65054 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 போ் நீக்கப்பட்டபோதிலும் பெயா்களைச் சோ்க்க கடந்த 5 நாள்களில் 1,65,054 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.

வார இறுதி நாள்களில் பெயா்களைச் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகுதியுள்ள வாக்காளா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச.27, 28. ஜன.3,4. தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இந்த சிறப்பு முகாம்கள் சீராக நடைபெற மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் 26,4191 வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (டிச.23) வரை பெயா்களைச் சோ்க்க 46 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் திமுக சாா்பில் 24 மனுக்களும், அதிமுக சாா்பில் 22 மனுக்களும் அடங்கும். வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது நீக்கவோ கோரும் படிவம்-7-க்கு இதுவரை 1,211 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் நேரலை மொழிபெயர்ப்புக்கு அதிகரிக்கும் ஆதரவு!

முன் விரோதத்தில் முதியவரை கத்தியால் குத்தியவா் கைது

தொழிற்கடன் முகாம் - 59 பயனாளிகளுக்கு ரூ.7.30 கோடி கடனுதவி

கடன் வட்டியைக் குறைத்த பேங்க் ஆஃப் இந்தியா

உதவிப் பேராசிரியா் தோ்வு: தமிழக அரசுக்கு முதுநிலை ஆசிரியா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT