தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் இணையவுள்ளதாக அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் பேசுகையில் "தமிழ்நாடு மட்டுமல்ல; கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் விஜய்யை போன்றவர்கள் யாருமில்லையே என்று அங்கிருப்போர் ஏங்குகின்றனர்.
ஏனெனில், தமிழ்நாட்டில் ஒரு படத்துக்கு ஏறத்தாழ ரூ. 250 கோடி என்றால், 4 படங்கள் நடித்தால் ரூ. 1,000 கோடி. ஆனால், அந்தப் பணம் எனக்குத் தேவையில்லை. மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன் என்று வந்த ஒரே தலைவன்.
எல்லாரும் எதிர்பார்ப்பது - தமிழ் மண்ணில் பிறந்த ஒருவர் தமிழ் மண்ணை ஆளப் போகிறார். அந்தத் தலைவருக்காக மக்கள் சக்தி ஒன்றுகூடி இருக்கிறது. இளைஞர்களும் ஒன்றுகூடி இருக்கின்றனர்.
2026-ல் 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும், பொங்கலுக்குள் தவெகவில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் இணையவுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.