பேரவைத் தலைவர் அப்பாவு. 
தமிழ்நாடு

ஜன. 20-ல் கூடுகிறது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்!

2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜன. 20-ல் தொடக்கம்.

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அடுத்தாண்டு 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும்.

ஆளுநர் ஒப்புதலுடன் ஜன. 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய நாளே தமிழக முதல்வர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிப்பார்.

வரும் ஜன. 20 ஆம் தேதி காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை உள்வாங்கி நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

The first legislative assembly session of 2026 will begin on January 20th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்! (துலாம்- மீனம்)

ரூ. 16 லட்சம் நகைகள் திருட்டு... செய்யறிவால் வேலை இழந்த ஐடி ஊழியர் தோழியுடன் கைது!

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்... ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா! எந்தெந்தப் பொருள்களுக்குத் தடை?

மலேசியாவில் விஜய்!

SCROLL FOR NEXT