ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுனாமியால் பலியானோரின் நினைவிடத்தில் மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர்.  
தமிழ்நாடு

வேதாரண்யம் பகுதியில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு!

வேதாரண்யம் பகுதியில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சுனாமியில் பலியானவர்கள் நினைவு நாளையொட்டி பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், கிராமத்தினர் சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.

சுனாமியால் பலியானவர்களின் நினைவாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூணில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

திமுகவினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, மணியன்தீவு, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

On Friday, tributes were paid at various places in the Vedaranyam area of ​​Nagapattinam district in memory of those who perished in the tsunami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் திரைப்படம் செய்த புதிய சாதனை!

பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு! ஆஸ்திரேலியா, இங்கிலாந்து திணறல்!

கள்ளக்குறிச்சியில் 2.16 லட்சம் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

நின்றுகொண்டிருந்த லாரி மீது அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒருவர் பலி!

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT