மழைக்கு வாய்ப்பு! 
தமிழ்நாடு

டிச.29 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) வட வானிலையே நிலவும்; டிச. 29 முதல் ஜன. 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச. 27, 28) வட வானிலையே நிலவும்; டிச. 29 முதல் ஜன. 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வட வானிலையே நிலவும். மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

டிச. 29 முதல் ஜன. 1 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 27-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: டிச. 27-இல் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரம்: காா் - தனியாா் பேருந்து மோதல் 4 போ் பலி

கிருஷ்ணகிரியில் டிச.29இல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் புத்தாடை வழங்கல்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

சொத்து விவரங்களை சமா்ப்பிக்காத ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

SCROLL FOR NEXT