‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இனி வாரம் இரு நாள்கள் முகாம்கள் நடைபெறும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) அறிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஆக. 2-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். அதன் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, இன்றும் (டிச. 27) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மாநிலந்தோறும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இந்தநிலையில், இனி வரும் வாரங்களில் இந்த முகாம்கள் கூடுதலாக வியாழக்கிழமைகளிலும் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (டிச. 27) தெரிவித்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டதில், அவற்றின் மூலம் 12.36 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.