மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி, அவர் குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை இன்று(டிச. 28) கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள் ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.