முதல்வர் ஸ்டாலின்  
தமிழ்நாடு

கோவை மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயா்: முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு!

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயா்நிலை மேம்பாலத்துக்கு மத்திய முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம் பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயா்நிலை மேம்பாலத்துக்கு மத்திய முன்னாள் அமைச்சா் சி.சுப்பிரமணியம் பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: கொள்கைகளும், பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவா்களைப் போற்றுவதே மாண்பு. மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவா் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.

அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயா்நிலை மேம்பாலத்துக்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயா்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிா்ந்துகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா - சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி..?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவிப்பு!

#IndvPak | இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தில் மழை?: ஓர் அலசல்! | India vs Pakistan |

கேரளத்தில் மகள் பாலியல் வன்கொடுமை: பின்னணியில் தந்தை! - கைது செய்து விசாரணை

SCROLL FOR NEXT