கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 3 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திச் சேவை

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, படகை பறிமுதல் செய்ததுடன், மீனவர்களைக் கைதும் செய்தனர் இதனையடுத்து, காங்கேசன் கடற்படை முகாமுக்கு மீனவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும், தொடர்ந்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைக்கவிருப்பதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

Sri Lankan Navy arrests 3 TamilNadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு இலங்கை எம்.பி. நமல் ராஜபக்ச வாழ்த்து!

கூடுதல் திரைகளில் சிறை! வசூல் எவ்வளவு?

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரி!

கையைக் காலைக் குறைச்சுக்கவா முடியும்? ரஜினியால் விஜயகாந்த் பட்ட சங்கடம்!

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி!

SCROLL FOR NEXT