ராமதாஸ் தலைமையில் வலிமையான கட்சியாக பாமக உருவெடுத்துக் கொண்டிருப்பதாக கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி பேசுகையில் "அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார்.
அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர்.
தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார்.
இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக் குழுக் கூட்டம், நாளை (டிச. 28) நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.