கோப்புப் படம் 
தமிழ்நாடு

கோடியக்கரை கடலில் தவறி விழுந்த இடிந்தகரை மீனவர் உடல் மீட்பு

கோடியக்கரை கடலில் தவறி விழுந்த இடிந்தகரை மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யம்: கோடியக்கரை கடலில் தவறி விழுந்த இடிந்தகரை மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் படகுத்துறையிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை மீனவ கிராமத்தை சேர்ந்த சூசை அந்தோணி மகன் லூர்து பிரபாகரன் (38), தங்கச்சிமடம் பாக்கியசீலன்(40) உள்ளிட்ட 8 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் டிச. 27 ஆம் தேதி கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம்.

திங்கள்கிழமை இரவு மீனவர் லூர்து பிரபாகரன் கடலில் தவறி விழுந்து மாயமானார்.

செவ்வாய்க்கிழமை (டிச., 30) காலையில் மிதந்த பிரபாகரனின் உடலை மீட்ட சக மீனவர்கள் செவ்வாய் மாலையில் கோடியக்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

body of the fisherman from Idinthakarai who fell into the sea at Kodiakkarai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026! தொண்டர்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!!

ஜப்பானை பின்னுக்குத்தள்ளியது இந்தியா! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு!

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

தொடரும் போராட்டம்: நள்ளிரவில் பெண் தூய்மைப் பணியாளர்கள் கைது!

2026 பொங்கலை சமூகநீதி கொண்டாட்டமாக்க முதல்வர் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT