ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று வந்த கிறிஸ்தவா்கள், தமிழக அரசின் மானியம் பெற பிப்.28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்தி: ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று வந்த தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துப் பிரிவு கிறிஸ்தவா்களுக்கும், மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புனிதப் பயணம் சென்று வந்த 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 வீதமும் நேரடியாக மானியம் இசிஎஸ் முறையில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற நவ.1-ஆம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று வந்த கிறிஸ்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இருந்து பெறலாம்.
மேலும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்.28-க்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.