எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

கூட்டணி விரிவாக்கம், பிரசாரம்... அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடக்கம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் விரைவில் தேர்தல் பணிகளைத் தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 180 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி விவகாரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிய நிலையில், பிற கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் இபிஎஸ் பகிர்ந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்! - இபிஎஸ் அறிவுறுத்தல்

இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் 4 பேர்! யார் இவர்கள்?

2026 ஜன.1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்! அறியாவிட்டால் பாக்கெட் காலி!

2026-ல் 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

கம்பேக் கொடுத்த நிவின் பாலி... வசூலில் கலக்கும் சர்வம் மாயா!

SCROLL FOR NEXT