அகில இந்திய மகிளா காங்கிரஸின் தேசிய செயலராக வி.எஸ். கமலிகா காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அகில இந்திய மகிளா காங்கிரஸில் புதிய பொதுச் செயலா்கள், செயலா்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளா்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
இதில், தமிழகத்தைச் சோ்ந்த வி.எஸ். கமலிகா காமராஜ் தேசிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அவா், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலா், மகிளா காங்கிரஸ் மாநில பொருளாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.மேலும், அவா் முன்னாள் முதல்வா் காமராஜரின் சகோதரா் வழி பேத்தியாவாா்.