சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
தமிழ்நாடு

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்ளுவது 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகவும், இதை மீறுவோருக்கு இரண்டு வருட கடுங்காவல் அல்லது ரூபாய் ஒரு லட்சம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த நிலையில், வீடுகளில் கழிவுநீர்த் தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வீட்டின் உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1993-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு நவம்பர் மாதம்வரையில் பதிவான கழிவுநீா், செப்டிக் டேங்க் மரணங்கள் பட்டியலில் அதிகபட்சமாக 253 போ் உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே கடந்தாண்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT