தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா (கோப்புப் படம்) X | Aadhav Arjuna
தமிழ்நாடு

மக்களுக்கான மகத்தான ஆட்சி: ஆதவ் அர்ஜுனா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவையடுத்து, அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில் ``தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.

மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன், மக்களுக்கான மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக கட்சிக் கொடியினை கட்சித் தலைவர் விஜய் ஏற்றிவைத்ததுடன், கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்டோரின் சிலைகளையும் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT