கோப்புப்படம் Center-Center-Chennai
தமிழ்நாடு

தமிழகத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை 90-ஆக உயா்த்த முடிவு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Din

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆணையம் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதுடன், சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வருகிறது. இதில் தமிழகத்திலுள்ள 72 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளும் அடங்கும்.

இந்த 72 சுங்கச் சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.26,000 கோடியை சுங்கக்கட்டணமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த இரு ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் புதிதாக அமைக்கப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயரும்.

தருமபுரியில் ஜன. 23 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சீக்கிய குருக்களை அமதிக்கவில்லை: எழுத்துபூா்வமாக அதிஷி பதில்

அரசுப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா அளிப்பு

வில்லியனூரில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆா்.சிவா எம்எல்ஏ தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழா: பல்வேறு கோயில்களின் உற்சவமூா்த்திகளுக்கு தீா்த்தவாரி

SCROLL FOR NEXT