நெல்லை அரசு மருத்துவமனையில் 
தமிழ்நாடு

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் கொடுத்துள்ளார்.

DIN

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில், 'பொன்மாறன் 10-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பொதுவான லிம்ஃபாடெனோபதி அல்லது ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா (ஐயமான நிலை) பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

லிம்போமா (Lymphoma) என்பது புற்றுநோய்களின் (Blood Cancer) ஒருவகை ஆகும். இது நீரிழிவு குழாய்கள் (Lymphatic System) மற்றும் நீரிழிவுக் கொழுந்து (Lymph Nodes) ஆகியவற்றை பாதிக்கும்.

இது நீரிழிவுக் குழாய்களில் உள்ள லிம்போசைட்டுகள் (Lymphocytes) என்ற வெள்ளையணுக்களை பாதிக்கிறது.

இந்தப் புற்றுநோய் நீரிழிவு கொழுந்து, ஸ்ப்ளீன் (Spleen), எலும்பு மஞ்ஜை (Bone Marrow) மற்றும் பிற உறுப்புகளில் உருவாகலாம். நோயாளிகளுக்கு கழுத்து, கையிடுக்குப்பகுதிகளில் குழாய் போன்ற வீக்கம் காணப்படும்.

12ம் தேதி காலை, கான்ட்ராஸ்ட் சிடி ஸ்கேன் (கழுத்து & மார்பு) எடுக்கப்பட்டது. ஐவி கான்ராக்ஸ்ட் மருந்து குழந்தைக்கு செலுத்தபட்டது. அதைத்தொடர்ந்து திடீரென வியர்வை, அதிர்வு போன்ற தீவிர நிலை குழந்தைக்கு ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதில் ஷாக் (அதிர்ச்சி) நிலையில் குழந்தை சேர்க்கப்பட்டது. கேன்சர் நீண்ட நாள்களாக இருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் திடீரென எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டது. குழந்தையை அதிக நுட்ப சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, வெண்டிலேட்டர் (சுவாச உதவி கருவி) மற்றும் அட்ரினலின் ஆதரவு வழங்கப்பட்டது. மருத்துவர்கள் 1000 சதவீதம் முயன்றார்கள்.

மயக்கவியல் மருத்துவர், இதய நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை பெற்று தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், சிறுவன் நிலை மேலும் மோசமடைந்து இருதயநிறுத்தம் (Cardiac Arrest) ஏற்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகும் குழந்தை இரவு 9.10 மணிக்கு உயிரிழந்துவிட்டது.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது என பரவும் தகவலில் உண்மையில்லை.' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT