கோப்புப்படம்  
தமிழ்நாடு

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 மலையேற்றப் பாதைகள் அடையாளம் காணப்பட்டு கடந்தாண்டு முதல் ’டிரெக்கிங்’ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

18 வயது நிரம்பியோர் தமிழக அரசின் www.trektamilnadu.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து வருகின்றது.

இந்த நிலையில், குளிர் காலம் முடிவடைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், காட்டில் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக ஏப்ரல் 15 வரை தமிழகம் முழுவதும் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT