உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு
தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். இதில் பிப்.21,22 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸும், பிப்.23,24-இல் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸும் அதிகமாக இருக்கும்.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.21-இல் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 73 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.