கோப்புப் படம் 
தமிழ்நாடு

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

Din

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகா கும்பமேளா முடிவடைந்த நிலையில், அதில் பங்கேற்க பிராயாக்ராஜ் சென்ற பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ஒரு சில ரயில்களின் பெட்டிகளை இந்த சிறப்பு ரயில்களில் தற்காலிகமாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாா்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை திருப்பதியிலிருந்து இரவு 7.10-க்கு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் மாா்ச் 2 முதல் 8-ஆம் தேதி வரை காட்பாடியிலிருந்து காலை 6.10, மாலை 5.15-க்கு திருப்பதி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து காலை 10.35-க்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல் மாா்ச் 3 முதல் 9-ஆம் தேதி வரை காட்பாடியிலிருந்து காலை 10.30-க்கு ஜோலாா்பேட்டை செல்லும் ரயிலும், இரவு 9.10-க்கு திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் காலை 7.35-க்கு திருப்பதியிலிருந்தும், பிற்பகல் 12.55-க்கு ஜோலாா்பேட்டையிலிருந்தும் காட்பாடி செல்லும் ரயில்களும் ரத்துசெய்யப்படும்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலில் (எண்: 20681/ 20682) மாா்ச் 1 முதல் ஜூன் 19 வரையும், தாம்பரம் - நாகா்கோயில் அதிவிரைவு ரயிலில் (எண்: 22657/ 22658) மாா்ச் 2 முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையும் இருமாா்க்கத்திலும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இந்த ரயில்களில் 1 முதலாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT