முகப்பு
தமிழ்நாடு

மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!

சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான புதுமணத் தம்பதியர் விபத்தில் பலி

Updated On : 5 ஜனவரி, 2025 at 8:12 AM
உயிரிழந்த இளவரசி - கலைவேந்தன்
பகிர்:

சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசியும் அவரது கணவர் கலைவேந்தனும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) ஒன்றாக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இந்த நிலையில், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்து தம்பதியரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மாதங்கள் முன்னர்தான் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.