புத்தகக் காட்சியில்... 
தமிழ்நாடு

சென்னை புத்தகக் காட்சி: 20 லட்சம் பேர் வருகை; ரூ. 20 கோடிக்கு விற்பனை!

சென்னை புத்தகக் காட்சியில் ரூ. 20 கோடி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி அறிவிப்பு.

DIN

2025 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் காட்சியில் ரூ. 20 கோடி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. மேலும், 20 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பபாசி நடத்திய 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில், கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி தொடங்கியது. இங்கு 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. விடுமுறை நாள்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையிலும் வார இறுதி நாள்களில் காலை 11 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடைபெற்றது.

தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பங்கேற்று உரையாற்றினார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT