கோப்புப்படம் TNDIPR
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: மூன்று நாள்களில் 1.47 கோடி போ் பெற்றனா்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 3 நாள்களில் 1.47 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற்றனா்.

Din

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 3 நாள்களில் 1.47 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற்றனா்.

இந்தத் தகவலை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில் கடந்த 9-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தால் 34, 793 நியாய விலைக் கடைகளிலுள்ள 2 கோடியே 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போா் பயன்பெறுவா் என அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை வரையான மூன்று நாள்களில் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளனா். இது மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கையில் 67 சதவீதம்.

மீதமுள்ள பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்! சீனாவை 7-0 என வீழ்த்தியது

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

SCROLL FOR NEXT