கோப்புப் படம் 
தமிழ்நாடு

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தேதி அறிவிப்பு!

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

DIN

தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ மற்றும் ‘சீட்டா’ நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜன. 24 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மாா்ச் 22 அன்று தோ்வுகள் நடைபெற உள்ளது.

அதேபோல, முதுநிலை எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நடத்தப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு சீட்டா (CEETA) வருகிற மார்ச் 23 அன்று நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 24 முதல் தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.tancet.annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

வேலூா், ராணிப்பேட்டைக்கு இன்று துணை முதல்வா் வருகை!

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

கோயில் குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு: முதல்வா் நிதியுதவி

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT