தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  
தமிழ்நாடு

ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டார்.

DIN

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க தவெக தலைவர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை, தவெக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்புகோரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

அவர்களின் மனுவை ஏற்று, சில நிபந்தனைகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததுடன், அதற்கான தகுந்த இடத்தையும் தவெக செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அந்த வகையில், பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதற்கு தனியார் மண்டபம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை காலை ஏகனாபுரம் புறப்பட்டார்.

தொடர்ந்து பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் போராட்டக் குழுவினரை அவர் சந்திக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT