திமுக நேற்று முளைத்த காளான் அல்ல: முதல்வர் ஸ்டாலின்
திமுக நேற்று முளைத்த காளான் அல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 51 நிர்வாகிகள் உள்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது.
Advertisement
Advertisement
திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் கூறினார்.
நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட, தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராவோம் என பேசுகிறார்கள். ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக, தமிழகத்துக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.