முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஞானசேகரனுக்கு பிப்.7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்...

Updated On : 27 ஜனவரி, 2025 at 2:47 PM
கைதாகியுள்ள ஞானசேகரன்.
பகிர்:

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்காளான வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை அடுத்த மாதம், பிப். 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் சென்னை கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே முதன்மை குற்றவாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று(ஜன. 27) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியான சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று(ஜன. 27) உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.