வேங்கைவயல் கிராமம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வேங்கைவயல்: சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என மனு தாக்கல்!

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

DIN

வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26 ஆம் தேதி தெரியவந்தது.

இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஜன. 22 அன்று முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாகப் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மீதே பழிபோடுவதா? என ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு தமிழக அரசு தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT