விருதுபெற்ற பெண் சாதனையாளர்கள். Express
தமிழ்நாடு

தேவி விருது பெற்ற பெண் சாதனையாளர்கள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் 31-வது தேவி விருதுகள் விழா...

DIN

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) நடைபெற்றது.

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் மருத்துவர் ப்ரீத்தா ரெட்டி, பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.

விருது பெற்றவர்கள்

கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் அருந்ததி சுப்ரமணியம், நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், கல்வியாளர் டாக்டர் சுதா சேஷய்யன், இசைக் கலைஞர் கதீஜா ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், கல்வியாளர் ஓமனா தாமஸ், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக்ஸ் வீராங்கனை ஜெர்லின் அனிகா, தொழிலதிபர் டாக்டர் லட்சுமி வேணு, சோல்ஃப்ரீ அறக்கட்டளை இணை நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், தொழில்முனைவோர் ராஜவள்ளி ராஜீவ் மற்றும் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருது பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT