தேவி விருதுகள் விழாவைத் தொடக்கிவைத்த  
தமிழ்நாடு

தேவி விருதுகள் 2025 தொடங்கியது!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேவி விருதுகள் வழங்கும் விழா...

DIN

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருது வழங்கப்படுகிறது.

இந்த விழாவை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் மருத்துவர் ப்ரீத்தா ரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.

விருது பெறுபவர்கள்

கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் அருந்ததி சுப்ரமணியம், நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், கல்வியாளர் டாக்டர் சுதா சேஷய்யன், இசைக்கலைஞர் கதீஜா ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், கல்வியாளர் ஓமனா தாமஸ், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக்ஸ் வீராங்கனை ஜெர்லின் அனிகா, தொழிலதிபர் டாக்டர் லட்சுமி வேணு, சோல்ஃப்ரீ அறக்கட்டளை இணை நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், தொழில்முனைவோர் ராஜவள்ளி ராஜீவ் மற்றும் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருது பெறவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண் வள அட்டையின் பரிந்துரைப்படி யூரியா உரத்தைப் பயன்படுத்த அறிவுரை

ராஜராஜேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

செப்.7-இல் சந்திர கிரகணம்: சமயபுரம் மாரியம்மன் கோயில் நடையடைப்பு

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT